Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பாரிஸில் 200 மீட்டர் ஓட்டத்தின் முதல் சுற்றை 31ஆவது இடத்தில் முடித்த சாந்தி பெரேரா; மற்றொரு வாய்ப்பு உண்டு

வாசிப்புநேரம் -
பாரிஸில் 200 மீட்டர் ஓட்டத்தின் முதல் சுற்றை 31ஆவது இடத்தில் முடித்த சாந்தி பெரேரா; மற்றொரு வாய்ப்பு உண்டு

(படம்: SNOC/Kong Chong Yew)

2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் அரையிறுதிச் சுற்றுக்கு நேரடியாகத் தகுதிபெறும் வாய்ப்பை சிங்கப்பூரின் சாந்தி பெரேரா நழுவ விட்டுள்ளார்.

ஆயினும் அவருக்கு மற்றொரு வாய்ப்பு உண்டு.

Stade de France விளையாட்டரங்கில் நடைபெற்ற தகுதிச்சுற்றில் 8 பேரில் பெரேரா கடைசியாக வந்தார். அவர் பதிவுசெய்த நேரம் 23.21 விநாடிகள் ஆகும்.

6 தகுதிச்சுற்றுகளிலும் முதல் 3 இடங்களைப் பிடிப்பவர்கள் மட்டுமே அடுத்த சுற்றுக்கு நேரடியாகத் தகுதிபெறுவார்கள்.

அந்த 6 சுற்றுகளில் மொத்தம் 45 வீராங்கனைகள் ஓடினர். அவர்களில் பெரேரோ 31ஆவதாக வந்தார்.

நாளை (5 ஆகஸ்ட்) நடைபெறும் 2ஆம் வாய்ப்புக்கான சுற்றில் சிறந்த நேரத்தைப் பதிவுசெய்தால் அவர் அடுத்த சுற்றுக்கு முன்னேறலாம்.

சில விளையாட்டுகளில் மட்டுமே 'repecharge' எனும் இந்த 2ஆம் வாய்ப்பு வழங்கும் நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.

இதற்குமுன்னர் அதிவிரைவு நேரத்தைப் பதிவுசெய்யும் விளையாட்டாளர்கள் அடுத்த சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பை பெற்றுவந்தனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்