Skip to main content
திருப்பதி திருமலைக் கோயில் கூட்ட நெரிசல்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

திருப்பதி திருமலைக் கோயில் கூட்ட நெரிசல் - 6 பேர் மரணம்

வாசிப்புநேரம் -
இந்தியாவின் திருப்பதியில் உள்ள திருமலைக் கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் மாண்டது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

புகழ்பெற்ற திருமலைக் கோயிலில் தரிசனத்துக்கான நுழைவுச் சீட்டைப் பெற ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.

அப்போது பக்தர்களுக்கு இடையே நடந்த மோதலால் நெரிசல் ஏற்பட்டதாகத் தெரிகிறது. 30 பேர் காயமடைந்தனர்.

கூட்டத்தைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. போதிய அளவு காவல்துறையினரும் பணியில் இல்லை என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.

நெரிசலில் மாண்டோரின் குடும்பத்தினருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டோருக்கு அதிகாரிகள் உரிய உதவிகள் வழங்குவர் என்று அவர் உறுதியளித்தார்.
ஆதாரம் : AP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்