6 மீட்டர் பாம்பிடமிருந்து நூலிழையில் உயிர்தப்பிய சிறுவன்
This audio is generated by an AI tool.
மலேசியாவின் பாஹாங் (Pahang) மாநிலத்தில் 10 வயதுச் சிறுவன் பாம்பின் பிடியிலிருந்து உயிர் தப்பினான்.
நேற்று முன்தினம் (8 ஜனவரி) சம்பவம் நடந்தது.
சிறுவன் தன் அண்ணனின் வீட்டிற்குச் சென்றிருந்தான்.
அங்கிருந்த புதர்களில் ஊர்ந்து திரிந்த பாம்பு சிறுவனின் காலைக் கொத்தியது; கழுத்தை நெரித்தது.
6 மீட்டர் நீளப் பாம்பின் எடை 40 கிலோகிராமுக்கும் அதிகம்.
15 நிமிடங்கள் சிக்கித்தவித்த சிறுவன் சோர்வடைந்ததாகத் தெரிகிறது.
அப்போது அவரது அண்ணன் அங்கே வந்தார்.
பயம் ஒரு புறமிருக்க அவர் தம்பியைக் காப்பாற்ற முயன்றார்.
முயற்சி தோல்வியடைந்தபோது அவர் உறவினர்களின் உதவியை நாடினார்.
கூரான கம்பு, கத்தி ஆகியவற்றை வைத்து அவர்கள் பாம்பின் பிடியைத் தளர்த்தினர்.
30 நிமிடப் போராட்டத்திற்குப் பிறகு அவர்கள் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர்.
சிகிச்சைக்குப் பிறகு சிறுவனின் உடல்நலம் நிலையாக இருக்கிறது.