மடக்கும் மேசையில் சிக்கி மாண்ட சிறுமி

unsplash
மலேசியாவின் ஜொகூர் பாருவில் இருக்கும் தாமான் செரி புத்ராவில் (Taman Seri Putera) உள்ள வீட்டில் 6 வயதுச் சிறுமி மடக்கும் மேசையில் மாட்டிக்கொண்டு மடிந்தார்.
மேசையின் கால்களில் அவர் மாட்டிக்கொண்டு மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
சிறுமியை அவரது மூத்த சகோதரர் கண்டுபிடித்தார்.
அந்தச் சம்பவம் நேற்று (1 ஜனவரி) நடந்ததாக The Star செய்தி நிறுவனம் தெரிவித்தது.
அந்த வாடகை வீட்டின் பின்புறத்தில் நூர் அகிஃபா ஹுமாய்ரா அப்துல்லா (Nur Aqifah Humaira Abdullah) தனியாக விளையாடிக்கொண்டிருந்தார்.
அவரின் தாயும் உடன்பிறப்புகளும் வீட்டில் இருந்தனர். சிறுமி விளையாடிக்கொண்டிருந்த இடத்திலிருந்து சத்தம் எதுவும் கேட்காதபோது அவர்கள் அங்கு வந்தனர்.
காவல்துறைத் தடயவியல் பிரிவு சம்பவம் நடந்த வீட்டில் விசாரணை நடத்துவதாக The Star தெரிவித்தது.