Skip to main content
சுவிட்சர்லந்துத் தீ
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

சுவிட்சர்லந்துத் தீ - இதய வடிவத்தில் அஞ்சலி

வாசிப்புநேரம் -
சுவிட்சர்லந்துத் தீ - இதய வடிவத்தில் அஞ்சலி

படம்: Facebook/Crans Montana


 
சுவிட்சர்லந்தில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது தீ விபத்தில் மாண்டோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இதய வடிவத்தில்...

கிரான் மொண்டானா (Crans-Montana) நகரின் பனிச்சறுக்கு மலையில் திரண்ட சுமார் 1,000 பேர் அந்த வடிவத்தை உருவாக்கினர்.

கிரான் மொண்டானா சுற்றுலா அலுவலகம் ஒரு காணொளியைப் பகிர்ந்துகொண்டது.

ஒருவர் பின் ஒருவராக பனியில் சறுக்கிக்கொண்டே மலையின் ஓரிடத்தில் திரண்டு மக்கள் இதய வடிவத்தில் நிற்பதைக் காணொளியில் பார்க்கமுடிகிறது.

கிரான் மொண்டானாவிலுள்ள மதுக்கூடத் தீ விபத்தில் 40 பேர் மாண்டனர். சுமார் 120 பேர் காயமுற்றனர்.

மது போத்தல்களில் இருந்த நெருப்புப் பொறி தீ விபத்துக்குக் காரணமாயிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மாண்டோர் அனைவரும் அடையாளங் காணப்பட்டனர். அவர்களில் பெரும்பாலோர் இளையர்கள்.
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்