Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

மறைந்த மலேசிய முன்னாள் பிரதமர் படாவியின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டார் மூத்த அமைச்சர் திரு லீ

வாசிப்புநேரம் -
மலேசியாவின் காலஞ்சென்ற முன்னாள் பிரதமர் அப்துல்லா அகமது படாவிக்கு இன்று அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச் சடங்கு நடைபெற்றது.

அதில் மூத்த அமைச்சர் லீ சியன் லூங் கலந்துகொண்டார்.

திரு லீயுடன் அவரின் துணைவியாரும் வெளியுறவு அமைச்சின் அதிகாரிகளும் சென்றதாகப் பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.

பிரதமர் லாரன்ஸ் வோங் அவரது Facebook பக்கத்தில் அஞ்சலி செலுத்தினார். மலேசியாவின் சமூக, பொருளாதார முன்னேற்றத்துக்குத் திரு படாவி முக்கிய பங்காற்றினார் என்றும் ஆசியான் நாடுகளின் நிலையை உயர்த்தினார் என்றும் திரு வோங் கூறினார்.

வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனும் Facebook பக்கத்தில் அவருடைய அனுதாபங்களைத் தெரிவித்தார். திரு படாவி மலேசியப் பிரதமராக இருந்தபோது இருதரப்பு உறவு மேம்பட்டதாக டாக்டர் பாலகிருஷ்ணன் கூறினார்.
ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்