சவால்களைச் சமாளிக்கச் சிறிய நாடுகளுக்கிடையில் வலுவான ஒத்துழைப்பு அவசியம்: பிரதமர் லீ

(படம்: CNA/Marcus Mark Ramos)
பிரதமர் லீ சியென் லூங் உலகில் தற்போது நீடிக்கும் வட்டார அரசியல், பொருளியல் சவால்களைச் சமாளிக்கச் சிறிய நாடுகளுக்கிடையே வலுவான ஒத்துழைப்பு அவசியம் என்று வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கிய நாட்டு நிறுவனப் பொதுச்சபைக் கூட்டத்துக்கிடையே சிறிய நாடுகளுக்கான கருத்தரங்கில் அவர் பேசினார்.
எதிர்பாராத மிரட்டல்களையும் உக்ரேன் மீதான ரஷ்யப் படையெடுப்பு, பருவநிலை மாற்றம், உணவுப் பொருள்களுக்கான விலையேற்றம், எண்ணெய் விலை உள்ளிட்ட பிரச்சினைகளையும் பிரதமர் சுட்டினார்.
சிங்கப்பூர் போன்ற சிறிய நாடுகளுக்கு அத்தகைய பிரச்சினைகள் ஆபத்தாய் இருப்பதைக் குறிப்பிட்ட அவர் அவற்றைச் சமாளிக்க உலக அமைப்புகளின் பங்கு முக்கியம் என்றார்.
சிறிய நாடுகள் தங்கள் நலன்களைப் பாதுகாத்துக் கொள்ளப் பலதரப்புக் கட்டமைப்பை வலுப்படுத்தத் துடிப்புடன் பங்காற்றவேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.