Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

கலிமந்தான் காட்டுத்தீ: அண்டை நாடுகளுக்கும் பரவும் புகைமூட்டம்

வாசிப்புநேரம் -
கலிமந்தான் காட்டுத்தீ: அண்டை நாடுகளுக்கும் பரவும் புகைமூட்டம்

படம்: Hasnoor Hussain/ Reuters

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 03 Sep 2026 09:36AM புதுப்பிப்பு : 03 Sep 2026 06:10PM
இந்தோனேசியாவின் கலிமந்தான் (Kalimantan) பகுதியில் எரியும் காட்டுத் தீயிலிருந்து எழும் புகை அண்டை நாடுகளுக்குப் பரவுகிறது.

மலேசியா, பிலிப்பீன்ஸ் உள்ளிட்ட வட்டார நாடுகளின் சில பகுதிகளில் காற்றின் தரம் அபாயகரமான நிலையை எட்டியுள்ளது.

மலேசியாவில் புகைமூட்டத்தை மேலும் மோசமாக்கக்கூடிய நடவடிக்கைகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

வாகனப் போக்குவரத்தும் காற்றின் தரத்தைப் பாதிப்பதால் பொதுமக்கள் வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

புருணையிலும் (Brunei) புகைமூட்டம் நீடிப்பதால், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

பிலிப்பீன்ஸில் தலைநகர் வட்டாரம், மத்திய லூஸோன் (Luzon), கலபர்ஸோன் (Calabarzon) பகுதிகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

பிள்ளைகள், மூத்தோர், சுவாச அல்லது இதய நோய் உள்ளவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அடிக்கடி ஏற்படும் எல்லை தாண்டிய புகைமூட்டப் பிரச்சினையைச் சமாளிக்க 'ஆசியான் ஒப்பந்தம்' போதுமான பலனைத் தந்துள்ளதா என்ற கேள்வியும் இப்போது எழுந்துள்ளது.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்