Skip to main content
பாம்புத் தீவு; மனிதர்களுக்கு அனுமதி இல்லை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

பாம்புத் தீவு; மனிதர்களுக்கு அனுமதி இல்லை - எங்கே?

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஆயிரக்கணக்கான நச்சுப் பாம்புகள்... ஒரே இடத்தில்... எங்கே?

பிரேசிலின் இல்ஹா டா குயிமாடா கிராண்டே (Ilha da Queimada Grande) தீவில் அவற்றைக் காணலாம்.

அது பாம்புத் தீவு என்று அறியப்படுகிறது.

43 ஹெக்டர் பரப்பளவைக்கொண்ட அந்தத் தீவு பிரேசிலின் கரைக்கு 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

அந்தத் தீவுக்குள் செல்ல மனிதர்களுக்கு அனுமதி இல்லை. குடிநீர், மருத்துவச் சேவை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அங்கு கிடையாது.

சிறப்பு அனுமதி பெற்ற சில அறிவியலாளர்கள் மட்டுமே அங்கு செல்லலாம்.

அவர்கள் மருத்துவப் பொருள்களையும் பாதுகாப்புச் சாதனங்களையும் எடுத்துச் செல்வதுண்டு.

தீவில் சதுர மீட்டருக்கு ஒரு பாம்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

குறிப்பாக கோல்டன் லான்ஸ்ஹேட் வைப்பர் (Golden lancehead viper) என்ற பாம்பு அங்கு மட்டுமே இயற்கையாகக் காணப்படுகிறது.

அது கொத்தினால் சிறுநீரகம் செயலிழக்கலாம்; மூளையில் ரத்தக் கசிவு ஏற்படலாம்.

இருப்பினும் அந்தப் பாம்பின் நஞ்சில் உயிர்காக்கும் மருத்துவ குணம் இருக்கிறதா என்று அறிவியலாளர்கள் ஆராய்ச்சி செய்கின்றனர்.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்