Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்காவில் கடும் பனிப்புயல்

வாசிப்புநேரம் -
அமெரிக்காவின் தென் மாநிலங்களில் கடும் பனிப்புயல் ஏற்பட்டுள்ளது.

அந்தப் பகுதிகளில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

டெக்ஸஸிலிருந்து (Texas), ஜார்ஜியா (Georgia), சவுத் கரோலைனா (South Carolina) வரை மில்லியன்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அர்க்கன்சாவின் (Arkansas) சில பகுதிகளில் 30 செண்டிமீட்டர் உயரத்துக்குப் பனி பொழிந்தது.

பனிப்பொழிவால் சாலைகளில் திக்குமுக்காடும் ஒட்டுநர்களுக்கு உதவ, அர்க்கன்சா ஆளுனர் தேசியப் பாதுகாவல் பிரிவை வரவழைத்துள்ளார்.

ஜார்ஜியாவில் மக்களுக்கு உதவப் பணிக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அங்கு மின்சாரத் தடையால் குறைந்தது 100,000 பேர் பாதிக்கப்பட்டனர்.

அங்கே 20 செண்டிமீட்டர் உயரம் வரை பனி பொழியலாம் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

உலகின் ஆகப் பரபரப்பான விமான நிலையமான அட்லாண்டா (Atlanta) விமான நிலையத்தைச் சுற்றிய பகுதிகளிலும் கனத்த பனிப்பொழிவு நிலவுகிறது.
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்