Skip to main content
$3.4 மில்லியன் வெள்ளி பரிசு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

$3.4 மில்லியன் வெள்ளி பரிசு - சதுரங்கத்தில் காற்பந்து வீரர் Haaland

வாசிப்புநேரம் -
$3.4 மில்லியன் வெள்ளி பரிசு - சதுரங்கத்தில் காற்பந்து வீரர்  Haaland

படம்: AP/Dave Shopland

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஏர்லிங் ஹாலண்ட் (Erling Haaland)...

மென்செஸ்ட்டர் சிட்டி (Manchester City) நார்வே காற்பந்துக் குழுக்களின் நட்சத்திர ஆட்டக்காரர்.

தற்போது நடைபெறும் பிரமியர் லீக் பருவத்தில் ஆக அதிகமாக 22 கோல்கள் புகுத்திய வீரர்.

ஆனால் காற்பந்தைத் தாண்டி அவருக்குச் சதுரங்க விளையாட்டிலும் ஆர்வமுள்ளது இப்போது தெரியவந்துள்ளது.

சதுரங்க விளையாட்டில் இன்னும் கூடுதலானோர் ஆர்வம் காட்டவேண்டும் என்பது அவரது கனவு.

அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் Total Chess World Championship Tour போட்டியில் அவரும் சேர்ந்துள்ளதாய்க் கூறப்படுகிறது.

Norway Chess அமைப்பு போட்டிக்கு ஏற்பாடு செய்கிறது. அதனை நிர்வகிக்கும் Chess Mates நிறுவனத்தைத் தொடங்குவதில் ஹாலண்ட் பங்காற்றினார்.

"சதுரங்க விளையாட்டு அறிவாற்றலை வளர்க்கும் சிறப்பான ஒரு விளையாட்டு. காற்பந்தைப் போல சதுரங்கத்திலும் விரைவாகச் சிந்தித்துத் திறமையாக விளையாட வேண்டும்," என்றார் ஹாலண்ட்.

4 நகரங்களில் நடைபெறும் போட்டியில் மொத்தமாகச் சுமார் 3.4 மில்லியன் வெள்ளி பரிசுத் தொகையாய் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதாரம் : AP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்