Skip to main content
சமூக ஊடக நட்சத்திர நாய், இறைச்சியான சோகம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

சமூக ஊடக நட்சத்திர நாய், இறைச்சியான சோகம்

வாசிப்புநேரம் -
சமூக ஊடக நட்சத்திர நாய், இறைச்சியான சோகம்

படம்: Douyin

சீனாவின் ஹெனான் (Henan) மாநிலத்தில் பிரபலமான நாய் ஒன்று திருடப்பட்டு இறைச்சிக்காகக் கொல்லப்பட்டது.

சமூக ஊடகங்களில் ஒன்றரை மில்லியனுக்கும் அதிகமான ரசிகர் கூட்டத்தைக் கொண்டிருந்தது "சுடோ" (Chutou) எனப்படும் பார்டர் கோலி (Border Collie) ரக நாய்.

சுடோவுக்கு எட்டு வயது.

சுடோவின் உரிமையாளர் குவோ (Guo) வெளியூர் சென்ற நேரத்தில் அதைத் தம் பெற்றோரின் பொறுப்பில் விட்டுச் சென்றார்.

குடும்பத்தின் வயலுக்குச் சென்ற சுடோ காணாமல் போனதை அடுத்து, சுடோ உடனடியாக வெளியூரிலிருந்து திரும்பினார்.

கண்காணிப்புக் கேமராவில் இருவர் மின்சார மோட்டார் சைக்கிளில் சுடோவை எடுத்துச் செல்வது பதிவாகியிருந்தது.

குவோ காணொளியில் காணப்பட்ட ஒருவரை மட்டும் கண்டுபிடித்தார்.

சுடோ 180 யுவானுக்கு (34 வெள்ளி) நாய் இறைச்சி உணவகத்துக்கு விற்கப்பட்டதாகவும் ஏற்கனவே கொல்லப்பட்டு சாப்பிடப்பட்டதாகவும் அந்நபர் தெரிவித்தார்.

சந்தேக நபருக்குத் திருட்டுக் குற்றச்சாட்டின் பேரில் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று சட்ட நிபுணர்கள் தெரிவித்தனர்.
ஆதாரம் : South China Morning Post

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்