30 ஆண்டுகளுக்குப் பின் சாலமன் தீவுகளில் மீண்டும் திறக்கப்படவுள்ள அமெரிக்கத் தூதரகம்

படம்: KEVIN LAMARQUE POOL/AFP
அமெரிக்கா சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு சாலமன் தீவுகளில் (Solomon Islands) மீண்டும் அதன் தூதரகத்தைத் திறக்கத் திட்டமிட்டுள்ளது.
பசிபிக் வட்டாரத்தில் சீனாவின் வளர்ந்துவரும் செல்வாக்கை எதிர்ப்பது அதன் நோக்கம்.
ஃபிஜிக்கு (Fiji) மேற்கொண்டுள்ள பயணத்தின்போது அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் (Anthony Blinken) அந்தத் திட்டம் பற்றி அறிவித்தார்.
சாலமன் தீவுகளில் அமெரிக்கா அதன் தூதரகத்தை 1993ஆம் ஆண்டு மூடியது.
ஏழ்மை உள்ளிட்ட மற்ற சில விவாரங்களால் கடந்த நவம்பர் மாதம் அங்கு வன்முறை ஆர்ப்பாட்டங்கள் வெடித்ததைத் தொடர்ந்து, தூதரகத்தை மீண்டும் திறக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.