Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

தென்னாப்பிரிக்காவில் தொடரும் வெள்ள மீட்புப் பணிகள்

வாசிப்புநேரம் -

தென்னாப்பிரிக்காவில் வெள்ள மீட்புப் பணிகள் தொடர்கின்றன.

இந்த வாரத் தொடக்கத்தில் பெய்த அடைமழையால் பெருகிய வெள்ளத்தில் சுமார் 400 பேர் மாண்டனர்.

நேற்று (16 ஏப்ரல்) மீண்டும் மழை கொட்டியது.

மண்ணில் தண்ணீர் மிதமிஞ்சித் தேங்கிநிற்பதால் கூடுதல் வெள்ளம் ஏற்படலாம் என்று தென்னாப்பிரிக்காவின் வானிலை ஆய்வகம் கூறியது.

கடும் மழையால் சாலைகள் சேதமடைந்ததுடன் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.

சுமார் 40,000 பேர் வீடுகளை இழந்தனர். 

நாட்டின் ஆகப்பெரிய நகரங்களில் ஒன்றான அம்லாஸியில் (Umlazi) வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் ஒரு சமூக மண்டபத்தில் தஞ்சம் புகுந்தனர்.

அண்மை நாள்களில் வானிலையைக் கணிப்பது சிரமமாக இருப்பதால் நகரங்களைத் தயார்ப்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்தப்படவேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்