Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

தென்னாப்பிரிக்காவில் தேசியப் பேரிடர் நிலை அறிவிப்பு

வாசிப்புநேரம் -

தென்னாப்பிரிக்காவில் தேசியப் பேரிடர் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. 

KwZaulu-Natal மாநிலம் வெள்ளத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதிபர் சிரில் ரமபோசா (Cyril Ramaphosa) பேரிடர் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

கடுமையான வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கி 440 க்கும் அதிகமானோர் மாண்டனர். மேலும் 10க்கும் அதிகமானோரைக் காணவில்லை. 

தென்னாப்பிரிக்கத் தேசியத் தற்காப்புப் படையினர் 10,000 பேர் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

மருத்துவ உதவிகளைச் செய்யவிருக்கும் தற்காப்புப் படை, மீட்பு, நிவாரணப் பணிகளுக்காக ஹெலிகாப்டர்களையும் வழங்கவுள்ளது.

தென்னாப்பிரிக்காவில், வெள்ளத்தால் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர். 

பல இடங்களில் மின்சாரமும் குடிநீர் வசதியும் இல்லை.

ஆப்பிரிக்காவின் சுறுசுறுப்பான டர்பன் (Durban) துறைமுகத்தில் பணிகள் தடைபட்டுள்ளன. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்