தென் சீனக் கடல் விவகாரம் - வருத்தம் தெரிவித்த பிலிப்பீன்ஸ்

(படம்: Reuters)
தென் சீனக் கடல் விவகாரத்தைப்பற்றி பிலிப்பீன்ஸ் வருத்தம் தெரிவித்துள்ளது.
ஆசியான் (ASEAN) உறுப்பு நாடுகளும் சீனாவும் சர்ச்சைக்குரிய தென் சீனக் கடற்பகுதியைப்பற்றி பேச்சு நடத்தியபோது பிலிப்பீன்ஸ் தனது கவலைகளை வெளியிட்டது.
அண்மைக் காலமாக பிலிப்பீன்சுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல்கள் அதிகரித்துள்ளன.
இவ்வாண்டு பிப்ரவரி மாதத்தில் சீனக் கடற்படை அபாயகரமான விமான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக பிலிப்பீன்ஸ் குற்றஞ்சாட்டியது.
தனது கப்பல்களும் கப்பல் சிப்பந்திகளும் ஆபத்தான நிலையில் மாட்டிக்கொண்டதாக அது கூறியது.
தென் சீனக் கடல் தொடர்பான பூசல்களை அமைதியான முறையில் தீர்க்க முயற்சி செய்துவருவதாக பிலிப்பீன்ஸ் வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது.
தென் சீனக் கடற்பகுதிக்கான நடத்தைக் கோட்பாட்டை உருவாக்க ஆசியானும் சீனாவும் 2002ஆம் ஆண்டில் ஒப்புக்கொண்டன.
ஆனால் அது பற்றிய பேச்சைத் தொடங்க 15 ஆண்டுகள் ஆகின.
இதுவரை சொற்ப முன்னேற்றமே ஏற்பட்டுள்ளது.