ராணுவ ரகசியப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ள தென்கொரியா - ஜெர்மனி
வாசிப்புநேரம் -

(படம்: Chung Sung-Jun/Pool via REUTERS)
தென் கொரியாவும் ஜெர்மனியும் ராணுவ ரகசியங்களைப் பாதுகாக்கும் ஒப்பந்தத்தில் விரைவில் கையெழுத்திடவிருக்கின்றன.
இரு நாடுகளுக்கும் இடையிலான தற்காப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த அது உதவும்.
தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோலும் (Yoon Suk Yeol) ஜெர்மானியப் பிரதமர் ஒலாஃப் ஷோல்ஸும் (Olaf Scholz) சோலில் சந்தித்து பேசிய பிறகு அந்த அறிவிப்பு வெளியானது.
அனைத்துலகப் பொருளாதார, அரசியல் நிச்சயமற்றத்தன்மை நிலவுகிறது. இதற்கு இடையே தற்காப்புத் தொழில்துறையின் விநியோகக் கட்டமைப்புப் பிரச்சினைகளைச் சரிசெய்ய ஒப்பந்தம் உதவும் என்று திரு. யூன் கூறினார்.
தென் கொரியா கனடாவுடன் அதேபோன்ற ஒரு தகவல் பகிர்வு இணக்கத்தை அண்மையில் எட்ட முயற்சி செய்தது.
உக்ரேனில் நிலவும் போராலும் மற்ற அனைத்துலக பதற்றங்களாலும் நாட்டின் தற்காப்புத் துறையை விரிவுபடுத்த சோல் அந்த முயற்சியை எடுக்கிறது.