கம்போடியாவில் மோசடி நிலையங்கள் உள்ள பகுதிகளுக்குச் செல்லத் தடை விதிக்கும் தென் கொரியா
வாசிப்புநேரம் -
AFP
கம்போடியாவில் மோசடி நிலையங்கள் உள்ள பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று தென் கொரியா அதன் மக்களுக்கு இன்று (15 அக்டோபர்) தடை விதித்துள்ளது.
அண்மையில் கம்போடியாவில் கடத்தப்பட்ட தென்கொரிய மாணவர் துன்புறுத்தப்பட்டு மாண்டதாகக் கூறப்படுகிறது. அந்தச் செய்தி தென்கொரியாவை உலுக்கியுள்ளது.
தடை செய்யப்பட்ட பகுதிகளுக்குச் செல்லும் அல்லது அங்குத் தங்கும் தென் கொரிய மக்களுக்குத் தண்டனை விதிக்கப்படலாம்.
அந்த இடங்களுக்குச் செல்லத் திட்டமிட்டோர் பயணங்களை ரத்து செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
சுமார் 1,000 தென் கொரியர்கள் கம்போடியாவில் உள்ள மோசடி நிலையங்களில் வேலை செய்வதாக நம்பப்படுகிறது.

ஆதாரம் : AFP