Skip to main content
உண்மையைச் சொல்வாரா தென் கொரியாவின் முன்னாள் அதிபர் யூன்?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

உண்மையைச் சொல்வாரா தென் கொரியாவின் முன்னாள் அதிபர் யூன்?

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

தென்கொரிய முன்னாள் அதிபர் யூன் சுக் இயோல் (Yoon Suk Yeol), அரசாங்கத் தரப்பு வழக்கறிஞரின் விசாரணையில் பதிலளிக்கிறார்.

சென்ற டிசம்பரில் தென்கொரியாவில் சில மணி நேரம் ராணுவ ஆட்சியை நடைமுறைப்படுத்திப் பிறகு அதை மீட்டுக்கொண்டார் திரு யூன். அதனால் அவர் அதிபர் பதவியை இழந்தார்.

அரசாங்க வழக்கறிஞரின் விசாரணையால் திரு யூன் மீண்டும் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

அரசாங்க வழக்கறிஞர் அலுவலகத்தில் திரு யூனைச் செய்தியாளர்கள் சூழ்ந்தனர். அவர் இன்று உண்மையைச் சொல்லக் கூடும் என்கின்றனர் திரு யூனின் வழக்கறிஞர்கள்.

வழக்கு அரசியல் நோக்கமுடையது என்று அவர்கள் கூறினர்.

பலமுறை கடிதம் அனுப்பியும் திரு யூன் பதிலளிக்காததால் அவரைக் கைது செய்ய உத்தரவிடும்படி அரசாங்க வழக்கறிஞர் கோரியிருந்தார். ஆனால், விசாரணையில் ஒத்துழைக்க திரு யூன் ஒப்புக்கொண்டார்.
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்