Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பகுதிமின்கடத்தி உற்பத்தித் துறையில் தென்கொரியா $5 பில்லியன் முதலீடு

வாசிப்புநேரம் -
தென்கொரியா, பகுதிமின்கடத்திகள் துறைக்குக் கூடுதலாகக் கிட்டத்தட்ட 5 பில்லியன் டாலர் (6.5 பில்லியன் வெள்ளி) முதலீடு செய்யத் திட்டமிடுகிறது.

அமெரிக்கத் தீர்வைகளால் ஏற்பட்டுள்ள நிச்சயமற்றதன்மை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது.

அமெரிக்காவுக்குப் பகுதிமின்கடத்திகளைப் பெருமளவில் ஏற்றுமதி செய்கிறது தென்கொரியா.

அதிபர் டிரம்ப்பின் கூடுதல் 25 விழுக்காட்டு வரியால், பகுதிமின்கடத்தி, மோட்டார்வாகனத் துறைகள் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று சோல் கருதுகிறது.

அந்தத் துறைகள் கடும் சவால்களைச் சந்தித்து வருகின்றன.

அவற்றுக்கு உதவும் நோக்கத்துடன் முதலீடு செய்வதாகத் தென்கொரியா தெரிவித்தது.
 
ஆதாரம் : AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்