Skip to main content
தென்கொரியாவில் தேசிய நெருக்கடிநிலை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

தென்கொரியாவில் தேசிய நெருக்கடிநிலை - வெப்பத்தால் 19 பேர் மரணம்

வாசிப்புநேரம் -
தென்கொரியாவில் தேசிய நெருக்கடிநிலை - வெப்பத்தால் 19 பேர் மரணம்

(படம்: GREG BAKER / AFP)

வெளியீடு : 05 Aug 2026 09:24AM புதுப்பிப்பு : 05 Aug 2026 11:41AM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங் (Lee Jae Myung), நாட்டில் வீசும் அனல்காற்றைச் சமாளிக்கத் தேசிய நெருக்கடிநிலையை அறிவித்திருக்கிறார்.

கடும் வெப்பத்தால் 19 பேர் மாண்டனர்.

மே மாத நடுப்பகுதி முதல் இம்மாதம் (ஆகஸ்ட்) வரை சுமார் 2,000 பேர் வெப்பம் தொடர்பான சுகாதாரப் பிரச்சினைகளால் அவதியுறுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

எளிதில் பாதிக்கப்படக்கூடியோரைப் பாதுகாக்கும் முயற்சிகளைத் துரிதப்படுத்தும்படி திரு லீ அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.

மோசமான வானிலை நிகழ்வுகள் அடிக்கடி ஏற்படுவதால் தேசிய நெருக்கடிநிலை முறையை முழுமையாக மாற்றியமைக்கத் திரு லீ அழைப்பு விடுத்தார்.

தென்கொரியாவின் யங்சான் நகரில் அண்மையில் வெப்பநிலை 42.5 டிகிரி செல்சியஸாகப் பதிவானது.

அதுவே நாட்டின் வரலாற்றில் பதிவான ஆக அதிகமான வெப்பநிலை.
ஆதாரம் : Reuters

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்