தென்கொரியாவில் அதிரடி ராணுவச் சட்டம் - இன்றுடன் ஓராண்டு
வாசிப்புநேரம் -
(படம்: AP/Lee Jin-man)
தென்கொரியாவில் சிறிது நேரத்துக்கு ராணுவச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு இன்றுடன் ஓராண்டாகிறது.
முன்னைய அதிபர் யூன் சுக் யோல் (Yoon Suk Yeol) அறிவித்த சில மணிநேரத்திற்குள் அதை மீட்டுக்கொண்டார்.
அது நாடளாவிய குழப்பத்தை ஏற்படுத்தியது.
போராட்டங்களும் நீதிமன்ற விசாரணைகளும் மாதக்கணக்கில் தொடர்ந்தன.
பலர் கைதுசெய்யப்பட்டனர்.
தென்கொரியாவில் ஜனநாயகம் மீண்டுவிட்டது என்பதற்குக் கடந்த ஓராண்டே சாட்சி என்று அதிபர் லீ ஜே மியுங் (Lee Jae Myung) கூறினார்.
அதை நினைவுகூரும் விதமாக டிசம்பர் 3 பொது விடுமுறையாக அனுசரிக்கப்படும் என்றார் அவர்.
தென்கொரியர்கள் நொபெல் அமைதிப் பரிசுக்குத் தகுதியானவர்கள் என்று தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
வருங்காலத் தலைமுறையினர் மீண்டும் இப்படியொரு நெருக்கடியைச் சந்திக்க விடப்போவதில்லை என்று திரு லீ உறுதிகூறினார்.
ராணுவ ஆட்சி விவகாரத்தில் சரிசெய்யப்படவேண்டிய பிரச்சினைகள் இன்னமும் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஆதாரம் : AP