Skip to main content
Air Busan விமானம் தீப்பிடித்த சம்பவம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

Air Busan விமானம் தீப்பிடித்த சம்பவம் - 7 பேருக்குக் காயம்

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

Air Busan விமானம் நேற்று (28 ஜனவரி) தென் கொரியாவின் கிம்ஹே (Gimhae) விமான நிலையத்தில் தீப்பிடித்த சம்பவத்தில் 7 பேர் இலேசாகக் காயமடைந்துள்ளனர்.

ஏர்பஸ் A321 ரக விமானத்தில் இருந்த 169 பயணிகளும் 7 விமான ஊழியர்களும் பத்திரமாய் வெளியேற்றப்பட்டனர்.

விமானத்தில் பயணிகளின் இருக்கைக்கு மேல் பைகள் வைக்கப்படும் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கையில் எடுத்துச் செல்லக்கூடிய (portable) மின்கலனால் தீச்சம்பவம் நேர்ந்திருக்கக்கூடும்
என்று சந்தேகிக்கப்படுகிறது.

தீச்சம்பவம் ஏற்பட்டதற்கான காரணத்தை ஆராய விசாரணை நடைபெறுகிறது.

அதன் முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்பது தெரியவில்லை என அந்நாட்டின் போக்குவரத்து அமைச்சின் பேச்சாளர் AFP செய்தியிடம் கூறினார்.
ஆதாரம் : AFP

மேலும் செய்திகள் கட்டுரைகள்