Skip to main content
தென்கொரியா அதிபர் தேர்தல்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

தென்கொரியா அதிபர் தேர்தல் - வாக்களிப்புத் தொடங்கியது

வாசிப்புநேரம் -
தென்கொரியா அதிபர் தேர்தல் - வாக்களிப்புத் தொடங்கியது

(படம்: Pedro Pardo / AFP)

வெளியீடு : 03 Jun 2025 09:50AM புதுப்பிப்பு : 03 Jun 2025 11:34AM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

தென்கொரியாவில் இன்று அதிபர் தேர்தல் வாக்களிப்பு.

முன்னாள் அதிபர் யூன் சுக் யோல் (Yoon Suk Yeol) சில மணி நேரம் ராணுவ ஆட்சியை நடைமுறைப்படுத்தி மீட்டுச் சரியாக 6 மாதங்கள் ஆகிவிட்டன.

உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 5 மணிக்கு வாக்களிப்பு தொடங்கியது.

இன்று மாலை 6 மணி வரை அது தொடரும்.

சென்ற வாரம் ஆரம்பக்கட்ட வாக்களிப்பில் மில்லியன் கணக்கானோர் வாக்களித்துவிட்டனர்.

பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் ஏற்கனவே வாக்களித்துவிட்டதாகத் தென்கொரியாவின் தேசிய தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

தென்கொரியாவின் அடுத்த அதிபராவதற்கு 4 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

எதிரணியான கொரிய ஜனநாயக கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் லீ ஜே மியுங் (Lee Jae Myung) கருத்துக்கணிப்புகளில் முன்னிலை வகிப்பதாக கூறப்படுகிறது.
ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்