Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

Jeju Air விமானம் விபத்துக்குள்ளாவதற்கு முன்பே அதன் பதிவுப் பெட்டிகள் செயலிழந்துவிட்டன

வாசிப்புநேரம் -
தென் கொரியாவில் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளான Jeju Air விமானத்தின் பதிவுப் பெட்டிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

விமானத் தரவுகளையும் குரல்பதிவுகளையும் கொண்டுள்ள அந்தப் பெட்டிகள் விபத்து ஏற்படுவதற்கு 4 நிமிடங்கள் இருந்தபோது செயலிழந்துவிட்டன. தென் கொரியப் போக்குவரத்து அமைச்சு அதனை தெரிவித்தது.

தாய்லந்திலிருந்து புறப்பட்டு தென் கொரியாவின் முவான் (Muan) விமான நிலையத்தில் தரையிறங்கியபோது விமானம் ஓடுபாதையிலிருந்த கான்கிரீட் சுவற்றை மோதி தீப்பற்றியது.

கடந்த மாதம் 29ஆம் தேதி நிகழ்ந்த விபத்தில் 179 பேர் மாண்டனர்.

கொரிய மண்ணில் நிகழ்ந்த ஆக மோசமான விபத்தாக அது கருதப்படுகிறது.

தரவுப் பெட்டியிலிருந்து தகவல்களைச் சேகரிக்க முடியாததால் அதனைத் தென் கொரிய அதிகாரிகள் அமெரிக்காவிலுள்ள தேசியப் போக்குவரத்துப் பாதுகாப்பு வாரியத்தின் ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் அதிலிருந்த தரவுகள் அனைத்தும் அழிந்துவிட்டதை அமெரிக்க அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

தரவுகள் அழிந்ததற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடத்தவும் திட்டம் இருப்பதாகத் தென் கொரிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

விபத்துக்கான காரணத்தை எப்படியாவது கண்டறிந்துவிட வேண்டும் என்பதில் அதிகாரிகள் உறுதியாய் இருக்கின்றனர்.
ஆதாரம் : AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்