Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

பள்ளிக்குள் புகுந்து தேர்வுத் தாளைத் திருட முயன்ற மாணவியின் அம்மா கைது

வாசிப்புநேரம் -
பள்ளிக்குள் புகுந்து தேர்வுத் தாளைத் திருட முயன்ற மாணவியின் அம்மா கைது

(கோப்புப் படம்: TODAY)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

தென்கொரியாவில் பள்ளிக்குள் புகுந்து தேர்வுத் தாள்களைத் திருட முயன்ற இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவர் பள்ளியின் முன்னாள் ஆசிரியர். மற்றொருவர் அந்தப் பள்ளி மாணவியின் தாய் என்று AFP செய்தி நிறுவனம் கூறியது.

ஜூலை 4ஆம் தேதி தேர்வுத் தாள்களைத் திருட முயன்றபோது அலாரம் அடித்து அவர்கள் வசமாகச் சிக்கினர்.

31 வயது முன்னாள் ஆசிரியரும் அவருடன் இருந்த 48 வயதுப் பெண்ணும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

பிடிபட்ட ஆசிரியர் பள்ளியில் கடந்த பிப்ரவரி மாதம் வரை வேலை செய்தார். அவர் பெண்ணின் பிள்ளைக்குத் துணைப்பாட வகுப்பு நடத்தி வந்தார்.

அவர்கள் இதே போன்ற திருட்டுகளை இதற்குமுன்னும் செய்திருப்பதாக நம்பப்படுகிறது.

அவர்களுக்குத் துணைபோனதாக நம்பப்படும் பள்ளிப் பாதுகாவலரும் கைதானார்.

சம்பந்தப்பட்ட பெண்ணின் மகள் 2023ஆம் ஆண்டிலிருந்து பள்ளியில் சிறந்த மதிப்பெண் பெற்று வந்தவர். இப்போது மாணவி பள்ளியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவரின் மதிப்பெண்கள் ரத்துச்செய்யப்பட்டன.

கல்விக்குக் கடும் போட்டி இருக்கும் தென்கொரியாவில் மாதிரித் தேர்வுத் தாள்களை விற்க முயன்ற குற்றத்துக்காகக் கடந்த 6 ஆண்டுகளில் சுமார் 250 பொது, தனியார் பள்ளி ஆசிரியர்கள் பிடிபட்டுள்ளனர்.
ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்