Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

விமானத்துறை பாதுகாப்புக் கட்டமைப்பைச் சீரமைக்கவிருக்கும் தென் கொரியா

வாசிப்புநேரம் -
தென் கொரியா அதன் விமானத்துறை பாதுகாப்புக் கட்டமைப்பைச் சீரமைக்கப்போவதாகக் கூறியுள்ளது.

கடந்த இரண்டு மாதங்களில் இரண்டு பெரிய விமான விபத்துகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்த முடிவு எடுக்கப்பட்டது.

நாட்டின் விமானத்துறை பாதுகாப்புக் கட்டமைப்பில் நம்பிக்கையைத் திரும்பக் கொண்டு வருவதில் கவனம் செலுத்தப் போவதாகப் போக்குவரத்து அமைச்சு சொன்னது.

அரசாங்கம் விமானத்துறை பாதுகாப்பை முதன்மையாகக் கருத வேண்டும் என்று அமைச்சு வலியுறுத்தியது.

விமானப் பயணத்தை மேம்படுத்த புதிய பணிக்குழு அமைக்கப்பட்டது.

பத்து வாரத்துக்குக் குழு பணியாற்றும்.

தனியார்த்துறை நிபுணர்கள் குழுவில் இருப்பர். விமானங்களின் பராமரிப்பு, பயன்பாட்டு விகிதம், விமான நிலையக் கட்டுமானம், இயக்கம் ஆகியவற்றை அவர்கள் ஆராய்வர் என்று கூறப்பட்டது.
ஆதாரம் : Reuters

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்