தென்கொரியாவின் முன்னாள் அதிபரின் வீட்டில் சோதனை
வாசிப்புநேரம் -
(படம்: Jung Yeon-Je/Pool via REUTERS)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
தென்கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் இயோல் (Yoon Suk Yeol) வீட்டில் அரசாங்க வழக்கறிஞர்கள் சோதனை நடத்தியுள்ளனர்.
Yonhap ஊடகம் அந்தத் தகவலைத் தெரிவித்தது.
திரு யூனின் மனைவி கிம் கியொன் ஹீ (Kim Keon Hee) ஒரு சாமியார் மூலம் சொகுசுப் பொருள்களை அன்பளிப்பாகப் பெற்றதன் தொடர்பில் அந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
சென்ற ஆண்டு (2024) டிசம்பரில் திரு யூன் ராணுவச் சட்டத்தை அறிவித்ததை அடுத்து அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
அவர் அதிபருக்கான வசிப்பிடத்திலிருந்து வெளியே அகற்றப்பட்டதால் தலைநகர் சோலில் உள்ள தமது வீட்டிற்குத் திரும்பினார்.
ஜியொன் சியொங் பே (Jeon Seong-bae) என்கிற அந்தச் சர்ச்சைகுரிிய சாமியார் (shaman) வைர கழுத்தணி, சொகுசுப் பை உள்ளிட்ட பொருள்களை Unification தேவாலயத்தின் உயர் அதிகாரியிடமிருந்து பெற்று திருவாட்டி கிம்மிடம் கொடுத்ததாக நம்பப்படுகிறது.
அந்தப் பொருள்களைத் தொலைத்துவிட்டதாகவும் அவற்றைத் திருவாட்டி கிம்மிடம் கொடுக்கவில்லை என்றும் ஜியொன் கூறுகிறார்.
திருவாட்டி கிம் அன்பளிப்புகளைப் பெற்றாரா இல்லையா என்பதை நிர்ணயிக்கும் பணியில் அரசாங்க வழக்கறிஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஆதாரம் : AFP