தென்கொரிய அதிபரைக் கைதுசெய்ய மேலும் ஒரு முயற்சி

AFP
தென்கொரியாவில் தற்காலிகமாய் பதவியிலிருந்து நீக்கப்பட்ட திரு யூன் சுக் இயோலைக் (Yoon Suk Yeol) கைதுசெய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புலனாய்வு அதிகாரிகளின் கைதாணை நேற்றோடு (6 ஜனவரி) முடிந்தது.
திரு யூனைக் கைதுசெய்ய அவர்கள் நேற்று முயற்சிசெய்தனர்.
புலனாய்வு அதிகாரிகள் அதிபர் இல்லத்திற்குச் சென்றிருந்தபோது நூற்றுக்கணக்கான பாதுகாப்புப் படையினர் அவர்களுக்கு எதிராக இருந்தனர்.
காவல்துறை, ஊழல் புலனாய்வு அலுவலகம் போன்றவற்றின் கூட்டுக் குழு கைதாணையைக் கையாளும்.
சென்ற மாதம் திரு யூன் அறிவித்து மீட்டுக்கொண்ட ராணுவ ஆட்சிப் பிரகடனத்தின் பேரில் கைதாணை பிறப்பிக்கப்பட்டது.