Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

நாயைக் குளிர்பதனப் பெட்டிக்குள் வைத்த பெண் மீது காவல்துறையில் புகார்

வாசிப்புநேரம் -
நாயைக் குளிர்பதனப் பெட்டிக்குள் வைத்த பெண் மீது காவல்துறையில் புகார்

படம்: envato.com

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

தென்கொரியாவில் "cookie" எனும் தமது செல்ல நாயைச் சூட்டிலிருந்து பாதுகாக்க அதனைக் குளிர்பதனப் பெட்டிக்குள் வைத்த பெண்ணுக்கு எதிராகக் காவல்துறையில் புகார் தரப்பட்டுள்ளது.

அது ஒரு பிட்ஸா (pizza) உணவகத்திலிருக்கும் குளிர்பதனப் பெட்டி. வாடிக்கையாளர்களுக்குப் பரிமாறும் உணவுப் பொருள்களும் அதனுள்தான் வைக்கப்பட்டுள்ளன.

அவர் நாயைத் துன்புறுத்தியதாக விலங்கு நல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

ஆனால் அந்தப் பெண்ணோ வேறு விளக்கம் கொடுத்தார்.

நாய்க்கு ஏற்கனவே இதயப் பிரச்சினை இருப்பதால் அதிகச் சூடு அதற்கு மரணத்தை ஏற்படுத்தும் ஆபத்து இருப்பதாக அவர் கூறினார்.

அதனால்தான் நாயைக் குறுகிய நேரத்துக்குக் குளிர்பதனப் பெட்டிக்குள் வைத்ததாகப் பெண் சொன்னார்.

உணவுப் பொருள்கள் உள்ள குளிர்பதனப் பெட்டிக்குள் வளர்ப்பு நாயை வைத்ததற்காக அவர் மன்னிப்புக் கேட்டார் என்று The Star செய்தி குறிப்பிடுகிறது.

 
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்