கிழக்குக் கடலை நோக்கி பல ஏவுகணைகளைப் பாய்ச்சிய வடகொரியா
படம்: AFP
This audio is generated by an AI tool.
வடகொரியா கிழக்குக் கடலை நோக்கிப் பல ஏவுகணைகளைப் பாய்ச்சியுள்ளது.
தென்கொரியத் தற்காப்பு அமைச்சு அதனை உறுதிப்படுத்தியது.
அண்மை நாள்களில் வடகொரியா பல்வேறு ஆயுதங்களையும் சோதித்துள்ளது.
கொத்துக் குண்டுகள், ஆளில்லா வானூர்திகள், அதிவேக ஏவுகணை ஆகியவை அவற்றில் அடங்கும்.
இதனால் இரு கொரியாக்களுக்கு இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.
இதற்கிடையே, வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் (Kim Jong Un) புதிதாகக் கட்டப்பட்டுவரும் போர்க்கப்பலைப் பார்வையிட்டுள்ளார்.
கூடுதல் போர்க்கப்பல்களைத் தயாரிக்கக் கப்பல் கட்டும் தளங்களை மேம்படுத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
புதிய போர்க்கப்பல், கடந்த ஆண்டு கட்டப்பட்ட கப்பலைவிடப் பெரியது என்று அரசாங்க ஊடகம் தெரிவித்தது.
கிட்டத்தட்ட 10,000 டன் எடை இருக்கும் என்று நம்பப்படுகிறது.
அது தொலைதூர ஏவுகணைகளை ஏந்திச் செல்லக்கூடியதாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.