Skip to main content
தென் கொரிய முன்னாள் அதிபர் யூன் சுக் யோல் சிறைத்தண்டனை உறுதி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

தென் கொரிய முன்னாள் அதிபர் யூன் சுக் யோல் சிறைத்தண்டனை உறுதி

வாசிப்புநேரம் -
தென் கொரிய முன்னாள் அதிபர் யூன் சுக் யோல் சிறைத்தண்டனை உறுதி

படம்: AFP/Kim Hong-ji

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

தென் கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் யோலின் (Yoon Suk Yeol) 7 ஆண்டுச் சிறைத் தண்டனையை நாட்டின் உச்சநீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது.

2024ஆம் ஆண்டு ராணுவச் சட்டத்தை அறிவிக்க முயன்றது தொடர்பான குற்றங்களுக்காக அவர் தண்டிக்கப்பட்டார்.

அமைச்சரவை ஆலோசனையைத் தடுத்தது, பிரதமரின் போலி கையெழுத்துகளுடன் ஆவணம் தயாரித்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவற்றில் அடங்கும்.

வழக்கறிஞர்கள் 10 ஆண்டுச் சிறைத் தண்டனை கோரியிருந்தனர்.

முதலில் கீழ்நீதிமன்றம் 5 ஆண்டுத் தண்டனை விதித்தது.

பின்னர் மேல்முறையீட்டு நீதிமன்றம் அதை 7 ஆண்டாக உயர்த்தியது.

அனைத்து மேல்முறையீடுகளையும் உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

அந்த முடிவு குறித்துத் திரு யூன்னின் வழக்கறிஞர்க் குழு வருத்தம் தெரிவித்தது.

உச்சநீதிமன்றம் போதுமான அளவு ஆலோசனையின்றி வழக்கை முடிவுக்குக் கொண்டு வருவதாக அது குறைகூறியது.

தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் புகார் அளிக்கப்படும் என்றும் குழு கூறியது.
 
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்