Skip to main content
மீண்டும் விசாரணைக்குச் செல்ல மறுத்த தென்கொரிய அதிபர்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

மீண்டும் விசாரணைக்குச் செல்ல மறுத்த தென்கொரிய அதிபர்

வாசிப்புநேரம் -
தென் கொரியாவில் கைதான அதிபர் யூன் சுக் இயோல் (Yoon Suk Yeol) மீண்டும் விசாரணைக்குச் செல்ல மறுத்துள்ளார்.

அவரைத் தொடர்ந்து காவல்துறையின் தடுப்புக்காவலில் வைப்பதற்காக அதிகாரிகள் 20 நாள் வரையிலான தடுப்புக்காவல் உத்தரவு வழங்கும்படி நீதிமன்றத்திடம் கேட்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திரு யூனைக் கைதுசெய்த முடிவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

அரசியல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் தென்கொரியத் தலைவர் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்.

அவரை விடுவிக்கும்படி வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அவரது வீட்டில் நடத்தப்பட்ட திடீர் சோதனை சட்டவிரோதமானது என்றும் அவர்கள் வாதிட்டனர்.

ஆனால் திரு யூனின் கைதுக்குப் பிறப்பிக்கப்பட்ட தடுப்புக்காவல் ஆணை செல்லுபடியானது என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

திரு. யூனிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ள மீண்டும் ஒருமுறை நீதிமன்ற ஆணை தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாதுகாப்பு விவகாரங்களைச் சுட்டி திரு. யூன் தமது வழக்கறிஞருடன் விசாரணைக்குச் செல்ல மறுத்துவிட்டார்.

நேற்று முன்தினமும் அவர் எந்தக் கேள்விக்கும் பதில் அளிக்கவில்லை.
ஆதாரம் : Reuters

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்