தென்கிழக்காசிய உல்லாசக் கப்பல்துறை 2024இல் $12.9 பில்லியன் சம்பாதித்தது
(படம்: Pixabay)
This audio is generated by an AI tool.
தென்கிழக்காசியாவின் உல்லாசக் கப்பல்துறை 2024ஆம் ஆண்டு 10 பில்லியன் டாலர் (12.9 பில்லியன் வெள்ளி) வருவாய் ஈட்டியிருக்கிறது.
அனைத்துலக உல்லாசக் கப்பல்துறையின் வருவாயில் 5 விழுக்காடு அது.
தென்கிழக்காசியாவின் உல்லாசக் கப்பல் துறையில் பயணிகளின் வருகை 2024இல் மொத்தம் 3.9 மில்லியன் என்று பதிவானது.
உலக உல்லாசக் கப்பல் பயணிகளில் 2 விழுக்காட்டினருக்கு அது நிகரானது.
எனினும் ஒவ்வொரு பயணியும் சராசரியாகச் செலவிட்ட தொகை அனைத்துலக அளவைவிட ஒரு மடங்கு அதிகம்.
ஒவ்வொரு பயணியும் சராசரியாகச் சுமார் 2,600 டாலர் செலவுசெய்தாகப் புள்ளிவிவரம் சொல்கிறது.
தென்கிழக்காசிய உல்லாசக் கப்பல் பயணிகளின் எண்ணிக்கையில் சிங்கப்பூர் கிட்டத்தட்ட பாதிப் பங்கைக் கொண்டுள்ளது.
தென்கிழக்காசிய வட்டாரத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உல்லாசக் கப்பல் துறையின் பங்கு சுமார் 4.5 பில்லியன் டாலர்.
சிங்கப்பூர்ப் பயணத்துறைக் கழகம் ஆசியானின் உல்லாசக் கப்பல் துறையின் மேம்பாட்டை ஒருங்கிணைக்கிறது.
உல்லாசக் கப்பல்துறையை மேலும் வளர்க்கக் கடப்பாடு கொண்டிருப்பதாகக் கழகம் சொன்னது.