Skip to main content
விண்வெளியில் சிக்கிய சுனிதா
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

விண்வெளியில் சிக்கிய சுனிதா - புட்ச் இருவரையும் மீட்கும் முயற்சியில் தடங்கல்

வாசிப்புநேரம் -
விண்வெளியில் சிக்கிக்கொண்ட இரண்டு நாசா வீரர்களைப் பூமிக்குக் கொண்டு வரும் Nasa-SpaceX முயற்சி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள Cape Canaveral விண்வெளி நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு அதற்குக் காரணம்.

விண்கலனில் 4 புதிய விண்வெளி வீரர்களை அனைத்துலக விண்வெளி நிலையத்திற்கு அனுப்பத் திட்டமிடப்பட்டது.

அங்கு மாட்டிக்கொண்ட சுனிதா வில்லியம்ஸ் (Sunita Williams), புட்ச் வில்மோர் (Butch Wilmore) ஆகியோரைப் பூமிக்குக் கொண்டுவருவது திட்டம்.

அவர்கள் இருவரும் சென்ற ஆண்டு (2024) ஜூன் மாதத்திலிருந்து விண்வெளியில் உள்ளனர்.

அவர்கள் பயணம் மேற்கொண்ட போயிங் விண்கலத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், அவர்களால் பூமிக்குத் திரும்ப முடியவில்லை.

அவர்களை அழைத்து வரும் விண்கலன் நேற்று (12 மார்ச்) புறப்பட்டிருந்தால் அவர்கள் வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் பூமியை வந்தடைந்திருக்கலாம் என்றது BBC செய்தி நிறுவனம்.

விண்கலன் இன்று புறப்படலாம். ஆனால் அதற்குள் கோளாறு சரிசெய்யப்படுமா என்பது தெரியவில்லை.
ஆதாரம் : Others/BBC

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்