விண்வெளியில் மாட்டிக்கொண்ட சுனிதா - புட்ச் பூமிக்குத் திரும்பவுள்ளனர்
வாசிப்புநேரம் -

படம்: NASA
விண்வெளியில் சிக்கிக்கொண்ட இரண்டு நாசா வீரர்களைப் பூமிக்கு அழைத்துவரும் SpaceX ஏவுகணை அனைத்துலக விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்துள்ளது.
அந்த ஏவுகணையில் புதிய குழு சென்றுள்ளது.
அங்கு கடந்த 9 மாதங்களாக மாட்டிக்கொண்டிருக்கும் சுனிதா வில்லியம்ஸ் (Sunita Williams), புட்ச் வில்மோர் (Butch Wilmore) ஆகியோரைப் பூமிக்குத் திரும்பவைப்பது திட்டம்.
அவர்கள் இருவரும் சென்ற ஆண்டு (2024) ஜூன் மாதத்திலிருந்து விண்வெளியில் உள்ளனர்.
அவர்கள் பயணம் மேற்கொண்ட போயிங் விண்கலத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் அவர்களால் பூமிக்குத் திரும்ப முடியவில்லை.
புதிய குழு வந்தவுடன் இருவரும் 2 நாள்களுக்குப் பிறகு பூமிக்குத் திரும்புவர்.

ஆதாரம் : Others/BBC