Skip to main content
வியட்நாமில் இலோன் மஸ்க்கின் Starlink துணைக்கோள இணையச் சேவைகள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

வியட்நாமில் இலோன் மஸ்க்கின் Starlink துணைக்கோள இணையச் சேவைகள்

வாசிப்புநேரம் -
வியட்நாம், செல்வந்தர் இலோன் மஸ்க்கின் (Elon Musk) Starlink நிறுவனம் நாட்டில் துணைக்கோள இணையச் சேவைகளை வழங்க ஒப்புதல் அளித்திருக்கிறது.

அந்நாட்டின் அறிவியல், தொழில்நுட்ப அமைச்சு அதற்கான ஒப்புதலை வழங்கியதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

நாட்டில் இணையத் தொடர்பை விரிவாக்கம் செய்ய Starlink அமைப்பு உதவும் என்று ஹனோய் (Hanoi) சொன்னது.

உலகில் உள்ள எளிதில் சென்றடைய முடியாத பகுதிகளுக்கு நிறுவனம் அதிவேக இணையத் தொடர்புகளை வழங்குகிறது.

அதற்கு பூமியைச் சுற்றிவரும் ஆயிரக்கணக்கான துணைக்கோளங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

வியட்நாமின் உயர் தலைவர் தொ லாம் (To Lam) அடுத்த வாரம் அமெரிக்காவுக்குச் செல்வார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அந்த ஒப்புதல் வந்துள்ளது.

அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் அமைதிக் குழுவின் முதல் சந்திப்பில் அவர் கலந்துகொள்வார் என்று கூறப்படுகிறது.

ஆனால் அது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை.
ஆதாரம் : Reuters

மேலும் செய்திகள் கட்டுரைகள்