Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உலகக் கிண்ணக் காற்பந்து 2022... முன்னேறியது ஜப்பான்... வெளியேறியது ஜெர்மனி...

வாசிப்புநேரம் -
உலகக் கிண்ணக் காற்பந்து 2022... முன்னேறியது ஜப்பான்... வெளியேறியது ஜெர்மனி...

(படம்: ADRIAN DENNIS / AFP)

ஜப்பானும் (Japan), ஸ்பெயினும் (Spain) சந்தித்த E-பிரிவின் கடைசி ஆட்டத்தில், ஜப்பான்  2-1 எனும் கோல் கணக்கில் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளது. ஸ்பெயினும் அடுத்த சுற்றுக்குத் தகுதிபெறுகிறது.
(படம்: Kirill KUDRYAVTSEV / AFP)
மற்றோர் ஆட்டத்தில், ஜெர்மனி (Germany) 4-2 என கோஸ்ட்டா ரிக்காவை (Costa Rica)  வென்றது. ஆனால், 4 முறை வெற்றியாளரான ஜெர்மனி E-பிரிவில் மூன்றாம் இடத்தில் வந்ததால் அடுத்த சுற்றுக்குத் தகுதிபெறும் வாய்ப்பை இழந்தது. 
(படம்: MANAN VATSYAYANA / AFP)
F-பிரிவில் குரோஷியாவும் (Croatia) பெல்ஜியமும் (Belgium)சந்தித்த ஆட்டத்தில் கோல் எதுவும் இன்றி ஆட்டம் சமநிலையில் முடிந்தது.குரோஷியா அடுத்த சுற்றுக்குத் தகுதிபெறுகிறது.
(படம்: Antonin THUILLIER / AFP)

கனடாவும் (Canada) மொரோக்கோவும் (Morocco) பொருதிய ஆட்டத்தில் 2-1 எனும் கோல் கணக்கில் மொரோக்கோ வெற்றிகண்டது. மொரோக்கோ அடுத்த சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளது.

பெல்ஜியமும் கனடாவும் உலகக் கிண்ணப் போட்டியிலிருந்து வெளியேறின.

'FIFA உலகக் கிண்ணம் கத்தார் 2022' - 64 ஆட்டங்களையும் meWATCH தளத்தில் நேரலையில் கண்டுரசிக்கலாம். 

சந்தா, விளையாட்டுகள் குறித்த மேல் விவரங்கள் - mewatch.sg/fifaworldcup

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்