Skip to main content
ஸ்பெயினில் திடீர் வெள்ளம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ஸ்பெயினில் திடீர் வெள்ளம் - 51 பேர் மரணம்

வாசிப்புநேரம் -
ஸ்பெயினின் தென்கிழக்கு வட்டாரத்தில் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

50க்கும் அதிகமானோர் மாண்டனர்.

பலரைக் காணவில்லை.

அவர்களைத் தேடும் பணி மும்முரமாய்த் தொடர்கிறது.

கிழக்கே வெலன்சியாவில் உச்ச விழிப்பு நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

கார்களுக்குள் சிக்கியவர்களைப் பத்திரமாய் கரை சேர்க்க மீட்புக் குழுவினர் பாடுபடுகின்றனர்.

தலைநகர் மட்ரிட் - வெலன்சியா இடையே அதிவேக ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தெற்கே அண்டலூசியாவிலும் கனத்த மழை.

அலோரா நகரில் பதிவான மழை அளவு 160 மில்லிமீட்டர்.

அங்குள்ள முக்கிய ஆறு கரைகளை உடைத்துப் பாய்கிறது.

14 பேர் வெள்ளத்தில் சிக்கினர்.

கிழக்குக் கரையோரம் கனத்த மழை நீடிக்க "குளிர் துளி" எனும் வானிலைச் சூழல் காரணமாயிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

மத்தியதரைக் கடலின் வெதுவெதுப்பான நீருக்கு மேலே குளிர்ந்த காற்று நகரும்போது மழை மேகங்கள் உருவாகும்.

இனி அடிக்கடி, கடுமையான வானிலை மாற்றங்கள் இவ்வாறு நேரலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஆதாரம் : AGENCIES

மேலும் செய்திகள் கட்டுரைகள்