தக்காளிச் சண்டையில் 20,000 பேர்
AP Photo/Alberto Saiz
This audio is generated by an AI tool.
வெள்ளைச் சட்டையுடன் வந்தவர்கள்... சிறிது நேரத்தில் தலை முதல் கால் வரை சிவப்பு!
ஸ்பெயினின் புனோல் (Buñol) நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் ‘லா டொமாட்டினா’ (La Tomatina) தக்காளித் திருவிழா மீண்டும் களைகட்டியது.
ஆயிரக்கணக்கானோர் ஒருவர்மீது ஒருவர் தக்காளிகளை வீசி மகிழ்ந்தனர்.
தக்காளிகளை ஏற்றிய லாரிகள் கூட்டத்தின் நடுவே செல்ல, அவற்றிலிருந்தும் தக்காளிகள் அள்ளி வீசப்பட்டன.
பாடல்கள் ஒலிக்க, பங்கேற்பாளர்களின் வெள்ளை ஆடைகள் விரைவிலேயே சிவப்பு நிறமாக மாறின.
சுமார் ஒரு மணி நேரம் நீடித்த தக்காளிச் சண்டை. சுமார் 20,000 பேர்.
கடந்த மூன்று ஆண்டுகளில் பங்கேற்றவர்களில் சுமார் 40 விழுக்காட்டினர் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் என்று ஸ்பெயினின் EFE செய்தி நிறுவனம் தெரிவித்தது.
அண்மைக் காலங்களில் இந்தியர்களின் வருகையும் அதிகரித்துள்ளது.
2011ஆம் ஆண்டு வெளியான பாலிவுட் திரைப்படமான ‘Zindagi Na Milegi Dobara’ அதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
படத்தில் இடம்பெற்ற ‘லா டொமாட்டினா’ காட்சி, இந்தியாவில் பலருக்கு இந்தத் திருவிழாவை அறிமுகப்படுத்தியது.
தக்காளிச் சண்டைக்குப் பிறகு புனோலின் சாலைகள் தண்ணீர் பாய்ச்சிச் சுத்தம் செய்யப்பட்டன.
தக்காளியில் உள்ள சிட்ரிக் அமிலம் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது.
அதனால் தக்காளியால் சிவந்த சாலைகள், விழா முடிந்ததும் முன்பைவிடச் சுத்தமாகக்கூட மாறுகின்றன!