Skip to main content
சுவிட்சர்லந்து புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் தீ
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

சுவிட்சர்லந்து புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் தீ - மது போத்தல்களில் இருந்த நெருப்புப் பொறிகள் காரணம்?

வாசிப்புநேரம் -
சுவிட்சர்லந்து புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் தீ - மது போத்தல்களில் இருந்த நெருப்புப் பொறிகள் காரணம்?
சமூக ஊடகத்தில் எடுக்கப்பட்ட படம்
வெளியீடு : 03 Jan 2026 10:07AM புதுப்பிப்பு : 03 Jan 2026 12:56PM
சுவிட்சர்லந்தின் கிரான் மொண்டானா (Crans-Montana) நகரிலிருக்கும் மதுக்கூடத்தில் தீ விபத்து ஏற்பட்டதற்கு மது போத்தல்களில் இருந்த நெருப்புப் பொறிகள் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

புத்தாண்டுக்கு முதல்நாள் ஏற்பட்ட தீ விபத்தில் 40க்கும் அதிகமானோர் மாண்டனர்.

தீப் பொறிகள் மதுக் கூடத்தின் கூரையை நெருங்கிச் சென்றது பெரிய விபத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

உல்லாச விடுதியின் பாதுகாப்புத் தரத்தைப் புலனாய்வாளர்கள் ஆராய்கின்றனர்.

சுமார் 200 பேர் கூடியிருந்த மதுபானக் கூடத்தில் வெளியேறிச் செல்ல ஒரேயொரு வழி மட்டுமே இருந்தது தெரியவந்துள்ளது.

தீ விபத்தில் சுமார் 120 பேர் காயமடைந்தனர். அவர்களில் பெரும்பாலோர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

அங்கிருக்கும் மருத்துவமனைகள் திணறுவதால் அவர்களில் சிலர் அருகே இருக்கும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

தீப்பிடிக்கும் தருணத்தைக் காட்டும் காணொளிகளும் படங்களும் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன.

அதில் இளையர்கள் பலர் தீப்பிடித்தது கூடத் தெரியாமல் உல்லாசமாக நடனம் ஆடிக்கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது.
ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்