Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

"காஸாவில் இஸ்ரேலிய ராணுவ நடவடிக்கை விரிவாக்கம் அதிர்ச்சியளிக்கிறது"

வாசிப்புநேரம் -
"காஸாவில் இஸ்ரேலிய ராணுவ நடவடிக்கை விரிவாக்கம் அதிர்ச்சியளிக்கிறது"

(படம்: AFP/Cris Bouroncle)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

இஸ்ரேலிய ராணுவம் காஸாவில் நடவடிக்கைகளை விரிவுபடுத்தப் போவதாகக் கூறியிருப்பது அதிர்ச்சியளிப்பதாக ஐக்கிய நாட்டு நிறுவன உதவித் தலைமைச் செயலாளர் மிரோஸ்லாவ் ஜென்க்கா (Miroslav Jenca) கூறியிருக்கிறார்.

அந்த நடவடிக்கையால் ஹமாஸ் பிடித்துவைத்திருக்கும் இஸ்ரேலியப் பிணையாளிகள் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்று அவர் சொன்னார்.

பாதுகாப்பு மன்றக் கூட்டத்தில் அவர் பேசினார்.

காஸாவில் பிணையாளிகளின் நிலைமை பற்றிப் பேச அந்தக் கூட்டத்திற்கு இஸ்ரேல் கோரிக்கை விடுத்திருந்தது. 2 இஸ்ரேலியப் பிணையாளிகளின் காணொளி வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து இஸ்ரேலின் கோரிக்கை வந்தது.

ஹமாஸ் இன்னும் 50 இஸ்ரேலியப் பிணையாளிகளைப் பிடித்து வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதில் பாதிப் பேர் உயிரோடு இருப்பதாக இஸ்ரேலியத் தற்காப்புப் படை நம்புகிறது.
 
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்