இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச...யார் இவர்?
வாசிப்புநேரம் -
இலங்கை அதிபர் தேர்தலின் முடிவுகள் நேற்று (22 செப்டம்பர்) வெளிவந்துள்ளன.
மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அனுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) இலங்கையின் அதிபராகத் தெரிவுசெய்யப்பட்டார்.
அதிபர் தேர்தலில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தோற்கடிக்கப்பட்டார்.
திரு பிரேமதாச பற்றி விவரங்களைத் திரட்டியது 'செய்தி'.
இளமைப் பருவம்
திரு பிரேமதாச 1967ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி கொழும்பில் பிறந்தார்.
அவர் London School of Economics பல்கலைக்கழகத்தில் படித்தார்.
குடும்பம்
திரு பிரேமதாசவின் தந்தை, ரணசிங்க பிரேமதாச 1989ஆம் ஆண்டில் இலங்கையின் மூன்றாவது அதிபராகப் பொறுப்பேற்றார். 1993ஆம் ஆண்டு அதிபராகப் பொறுப்பு வகித்தபோது அவர் தற்கொலைக் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார். சம்பவம் மே தினக் கூட்டத்தின்போது நடந்தது.
அரசியல் வாழ்க்கை
தந்தையின் மரணத்திற்குப் பிறகு திரு பிரேமதாச அரசியலில் களமிறங்கினார். தந்தையின் ஐக்கிய தேசியக் கட்சியில் சேர்ந்தார்.
அவர் 2000ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கால் வைத்தார்.
திரு பிரேமதாச 2018ஆம் ஆண்டு வீடு கட்டமைப்பு, கலாசாரத் துறைகளுக்கு அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
அவர் 2019இல் நடைபெற்ற அதிபர் தேர்தலில் போட்டியிட்டார். 42 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்றார். அந்தத் தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) வெற்றிகண்டார்.

ஆதாரம் : Others