இலங்கை வெள்ளம் - உணவின்றித் தவிக்கும் மக்கள்
வாசிப்புநேரம் -
இலங்கை அரசாங்கமும் உதவிக் குழுக்களும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதில் மும்முரமாய் உள்ளன.
டிட்வா (Ditwah) புயலால் இலங்கையில் வரலாறு காணாத வெள்ளம், நிலச்சரிவுகள்.
465 பேர் மாண்டனர். 336 பேரைக் காணவில்லை.
இலங்கை வரலாற்றின் சவால்மிக்க இயற்கைப் பேரிடரைச் சமாளிக்க நாட்டில் நெருக்கடி நிலையை அறிவித்தார் அதிபர் அனுர குமார திசாநாயக (Anura Kumara Dissanayake).
மழை ஓய்ந்துவிட்டாலும் நிலச்சரிவு அபாயம் தொடர்கிறது.
சில இடங்களில் மக்கள் ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்படுகின்றனர். அத்தியாவசிய உணவுப் பொருள்களும் வழங்கப்படுகின்றன.
ஆயிரக்கணக்கானோர் தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர். அவர்களின் உணவுக்கும் தண்ணீருக்கும் சிக்கல் நீடிக்கிறது. இலங்கை உலக நாடுகளின் உதவியை நாடுகிறது.
இதற்கிடையே, இலங்கைக்கு நிவாரணப் பொருள்களை ஏற்றிச் சென்ற ராணுவ விமானத்தை இந்தியா தடுத்ததாகப் பாகிஸ்தான் குற்றஞ்சாட்டுகிறது.
அது அடிப்படையற்ற குற்றச்சாட்டு என்று கூறும் இந்தியா, சில மணி நேரத்தில் விமானத்துக்கு அனுமதி வழங்கப்பட்டதாகத் தெரிவித்தது.
இந்தியாவின் தெற்குக் கரையோர மக்களும் டிட்வா புயலின் தாக்கத்திலிருந்து மெல்ல மீண்டு வருகின்றனர்.

ஆதாரம் : Others