Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடும் அனுரகுமார திசாநாயக்க... யார் இவர்?

வாசிப்புநேரம் -
இலங்கையில் அதிபர் தேர்தலின் வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

தற்போதைய நிலவரப்படி, மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) முன்னிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

திரு திசாநாயக்க பற்றிய விவரங்களைத் திரட்டியது 'செய்தி'.

இளமைப் பருவம்
  • 1968ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி இலங்கையின் தாம்புத்தேகமாவில் பிறந்தார்.
  • தந்தை கூலி வேலை செய்தார். அம்மா இல்லத்தரசியாக இருந்தார்.
  • தாம் பயின்ற கல்லூரியிலிருந்து பல்கலைக்கழகத்திற்குத் தகுதிபெற்ற முதல் மாணவர் எனும் பெருமை அவரைச் சேரும்.
அரசியல் வாழ்க்கை
  • திரு திசாநாயக்க பள்ளிப் பருவத்திலேயே JVP எனப்படும் ஜனதா விமுக்தி பெரமுனா (Janatha Vimukti Peramuna) கட்சியில் ஈடுபட்டிருந்தார்.
  • படிப்படியாக முன்னேறி 2014இல் ஜனதா விமுக்தி பெரமுனா கட்சியின் தலைவர் ஆனார்.
  • ஜனதா விமுக்தி பெரமுனா கட்சியைப் பிரதிநிதித்து 2019இல் அதிபர் வேட்பாளராகப் போட்டியிட்டார். 3 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்று தோல்வியுற்றார்.
அரசியல் கொள்கைகளில் சில..
  • சமூக நலனை அதிகரிக்கவேண்டும்
  • வரி தொடர்பில் மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும்
இலங்கை அதிபர் தேர்தல் குறித்து மேல் விவரங்களைப் பெற 'செய்தி' இணையவாசலுடன் இணைந்திருங்கள்.
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்