Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

இலங்கைத் தேயிலைத் தோட்டம் அருகே 1,000 அடி ஆழத்தில் கவிழ்ந்த பேருந்து

வாசிப்புநேரம் -
இலங்கைத் தேயிலைத் தோட்டம் அருகே 1,000 அடி ஆழத்தில் கவிழ்ந்த பேருந்து

Google Map

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

இலங்கையில் உள்ளூர்ச் சுற்றுப்பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து தேயிலைத் தோட்டத்துக்கு அருகே 1,000 அடி ஆழத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் 15 பேர் மாண்டனர்; 16 பேர் காயமுற்றனர்.

விபத்து நேற்றிரவு எல்லா (Ella) வட்டாரத்தில் நடந்தது.

பேருந்திலிருந்தவர்கள் குளிர்ந்த மலைப்பகுதியில் விடுமுறை முடித்துத் திரும்பிக்கொண்டிருந்தவர்கள் என்று AFP கூறியது. பேருந்து மற்றொரு வாகனத்துடன் மோதி பாதுகாப்புத் தடுப்பை உடைத்துக்கொண்டு பள்ளத்தில் விழுந்தது.

இலங்கையிலுள்ள வளைந்த நெளிந்த சாலைகள் உலகிலேயே ஆபத்தான பாதைகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றன.

22 மில்லியன் மக்களைக் கொண்ட இலங்கையில் ஆண்டுதோறும் சராசரியாக 3,000 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றனர்.
ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்