Skip to main content
Tebrau ரயில் சேவையின் புதிய கட்டணம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

Tebrau ரயில் சேவையின் புதிய கட்டணம்

வாசிப்புநேரம் -
KTMB நிறுவனத்தின் Tebrau ரயில் சேவையைப் பயன்படுத்தும் மலேசியர்கள் JB Sentralஇல் இருந்து சிங்கப்பூரின் உட்லண்ட்ஸுக்குச் செல்ல ஒருவழிப் பயணத்துக்கு 5 ரிங்கிட் செலுத்தினால் போதும். திரும்பிவரும் பயணத்துக்கும் அதே கட்டணம் விதிக்கப்படும்.

இந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் தேதியில் இருந்து அந்தக் கட்டணம் அமலுக்கு வருகிறது.

பயணச் சீட்டுகளை பிப்ரவரி 29ஆம் தேதியிலிருந்து வாங்கலாம்.

தற்போது உட்லண்ஸுக்குச் செல்லும் ஒருவழிப் பயணத்துக்கான கட்டணம் 5 ரிங்கிட்; ஆனால் திரும்பிவருவதற்கு 5 வெள்ளி (17.50 ரிங்கிட்) செலுத்த வேண்டும்.

புதிய கட்டணத்தால் JB Sentralக்கும் உட்லண்ட்ஸுக்கும் இடையே வழக்கமாக ரயிலில் செல்லும் சுமார் 40,000 மலேசியர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக Bernama கூறியது.

இந்தக் குறைந்த கட்டணத்தை அனுபவிக்க மலேசியர்கள் KTMB நிறுவனத்தின் KITS Mobile செயலியில் கணக்கைத் திறக்க வேண்டும். பின்னர் KTMBஇன் பயணச் சீட்டு முகப்புகளில் தங்களது அடையாள அட்டைகளைக் காட்ட வேண்டும்.

அடையாள அட்டையைச் சரிபார்க்கும் நடவடிக்கையைச் சுமுகமாக மேற்கொள்ள பிப்ரவரி 19ஆம் தேதியில் இருந்து மார்ச் 1ஆம் தேதி வரை JB Sentralஇல் கூடுதல் முகப்புகள் திறக்கப்படும் என்று KTMB கூறியது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்