இந்தக் காப்பிக் கடையில் சில பெயர்களை உச்சரிப்பதற்குத் தடை
This audio is generated by an AI tool.
Starbucks போன்ற காப்பிக் கடைகளில் பானம் வாங்கும்போது குவளைகளில் வாடிக்கையாளர்களின் பெயர் எழுதப்படுவது வழக்கம்.
பானம் தயாரானவுடன் ஊழியர்கள் பெயரைக் கூப்பிடுவார்கள்.
தென் கொரியாவில் உள்ள Starbucks கிளைகள் 6 பெயர்களைத் தடை செய்துள்ளன.
6 பெயர்களும் அந்நாட்டில் எதிர்வரும் அதிபர் தேர்தல் வேட்பாளர்களின் பெயர்கள்.
பெயர்களைத் தடை செய்வதற்குக் காரணம் என்ன?
அண்மையில் கடையில் பானம் வாங்கிய சிலர் சொந்த பெயரைப் பயன்படுத்தாமல் வேட்பாளர்களின் பெயர்களைப் பயன்படுத்தியுள்ளனர்.
வேட்பாளரின் பெயருடன் ஒரு முழக்கவரியையும் சேர்த்துள்ளனர்.
உதாரணத்துக்கு..'இவர் கைதுசெய்யப்படவேண்டும்','இவர் மற்ற நாடுகளுக்கு வேவு பார்க்கிறார்'.
'பெயர்' செயலியில் வழங்கப்பட்டதால் கடை ஊழியர்கள் வேறு வழியில்லாமல் அதைப் பயன்படுத்தவேண்டியிருந்ததாக BBC ஊடகம் சொன்னது.
பானத்தை நேரில் எடுக்க வருபவர்களை அழைப்பதற்கும் ஊழியர்கள் அந்தப் பெயரைப் பயன்படுத்தியதாக அது குறிப்பிட்டது.
வாடிக்கையாளர்களுக்குத் தவறான எண்ணத்தை அளிக்காமல் இருக்க பெயர்களைத் தடை செய்ததாக Starbucks தெரிவித்தது.
தேர்தல் சமயத்தில் நடுநிலையுடன் இருக்கவும் அது உதவும் என்று நிறுவனம் நம்புகிறது.