Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அடுத்த நூற்றாண்டுக்குள் 10இல் ஓர் உயிரினம் காணாமல்போகலாம்: ஆய்வு

வாசிப்புநேரம் -
உலகின் பல்லுயிர்ச் சூழல் ஆபத்தை எதிர்நோக்குவதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

அடுத்த நூற்றாண்டுக்குள் 10இல் ஓர் உயிரினம் காணாமல்போகக்கூடும் என்று புதிய ஆய்வு கூறியுள்ளது.

பருவநிலை நெருக்கடியால் உயிரினங்கள் அழிந்துபோகும் போக்கு அதிரித்து வருவது அதற்குக் காரணம்.

Science Advances எனும் சஞ்சிகையில் ஆய்வு வெளியிடப்பட்டது.

உலக வெப்பமயமாதல், சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் ஆகியவற்றால் உணவுக் கட்டமைப்புகள் எப்படி பாதிக்கப்படுகின்றன என்று ஆராயப்பட்டது.

கரியமில வாயு வெளியேற்ற நிலைமையைப் பொறுத்து 2050ஆம் ஆண்டுக்குள் தாவரங்களில் 6 விழுக்காடும் விலங்குகளில் 10 விழுக்காடும் அழிந்துபோகலாம் என்று கணிக்கப்படுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்