Skip to main content
வேண்டாத பிளாஸ்டிக்கிலிருந்து எரிபொருள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

வேண்டாத பிளாஸ்டிக்கிலிருந்து எரிபொருள் -அதைத் தானம் செய்யும் நிறுவனம்

வாசிப்புநேரம் -
பிளாஸ்டிக் கழிவுப் பிரச்சினையைத் தீர்க்க மெக்சிகோ புதிய வழிகளை ஆராய்கிறது. அவை பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களாக மாற்றப்படுகின்றன. அதனை செய்வது Petgas எனும் சிறிய நிறுவனம்.

உலகிலுள்ள பிளாஸ்டிக் கழிவுகளில் 10 விழுக்காடு மட்டுமே மறுபயனீடு செய்யப்படுகிறது. எனவே பிளாஸ்டிக் கழிவுகளை எரிபொருளாக மாற்றுவது அர்த்தமுள்ள முயற்சியாக அமையும் என்று நிறுவனம் நம்புகிறது.

உலகில் ஒவ்வொரு நாளும் 2,000 குப்பை லாரிகள் நிறைய பிளாஸ்டிக் கழிவுகள் கடல்கள், ஆறுகள், ஏரிகளில் கொட்டப்படுவதாக ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் சுற்றுச்சூழல் திட்டம் கூறுகிறது.

பிளாஸ்டிக் இனி கழிவாக இல்லாமல் எரிபொருள் உற்பத்திக்கான வளமாக இருக்கும் என்றும் Petgas நம்புகிறது.

அதற்காகக் கடற்கரைகளிலிருந்து போத்தல்கள் உள்ளிட்ட மற்ற கழிவுகளைச் சேகரிக்கும் இயக்கத்தையும் நிறுவனம் நடத்திவருகிறது.

இவ்வாறு பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து உற்பத்தியாகும் எரிபொருளை உள்ளூர்த் தீயணைப்புத் துறைக்கும் உணவு விநியோக நிறுவனங்களுக்கும் Petgas நன்கொடையாகக் கொடுத்து வருகிறது.
 
ஆதாரம் : AP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்